Thursday, October 23, 2014

ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி

" ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி "
ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
***********************************************************
(370 / 21-10-2014)




கோவை சிங்கநல்லூர் அருகே நீலிக்கோணாம்பாளையம் என்னும் இடத்தில் சண்முகம் ( 58 ) என்பவர் கண் தெரியாதவராக இருக்கும் காரணத்தால் பத்து வருடங்களாக குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய் ஓரமாக இத்தனை நாளும் இருந்திருக்கிறார் . அவரைப் பற்றி மனோன்மணி என்னும் பெண் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் தீபாவளி கொண்டாடும் நேரம் அவர் இப்படி இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார் . அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற ஈரநெஞ்சம் அமைப்பினர் , அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சண்முகத்தை அங்கேயே குளிக்க வைத்து , பொதுமக்கள் முன்னிலையில் அவரை தீபாவளி கொண்டாட வைக்க முடிவெடுத்தனர் . அதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களாகவே அவருக்கு உடுத்த புதிய துணி வாங்கி கொடுத்தனர் .பின்னர் சாப்பிட தீபாவளி பலகாரம் கொடுத்தனர் . பின்னர் அங்கிருக்கும் குழந்தைகள் முன்னிலையில் அவருக்காக பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி அங்கிருக்கும் மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களையும் நமது ஈரநெஞ்சம் அமைப்பு தெரிவித்துக்கொண்டது ...





பின்னர் கோவை மாநகராட்சி தங்கும் விடுதியில் அனுமதி கேட்டு அங்கு சண்முகம் அவர்களை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார் . "




" சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் பிறரை மகிழ்வித்துப் பார்ப்பது தான் " ; அந்த வகையில் சண்முகம் அவர்களை மகிழ்வித்ததில் ஈரநெஞ்சம் அமைப்பு பெருமிதம் கொள்கிறது . அதில் பொதுமக்களும் கலந்து கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது ...
ஈரநெஞ்சம் அமைப்பிற்கு இந்த தீபாவளி மறக்கமுடியாத தீபாவளி !!!
~ஈரநெஞ்சம்.
https://www.facebook.com/eeranenjam
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment