Thursday, June 05, 2014

நீங்களும் உடல்தானம் செய்யலாம் செய்யணும்.

கோவை ஜூன் 03 : இறந்த உடல் மண்ணுக்கு மட்டும் உரமாக பயனாகி வந்தது போதும். மனிதர்களுக்கும் பயனாகட்டும் என்ற உன்னதத்தின் வெளிப்பாடே உடல் தானம். இறந்த உடல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்கு தரப்படும் போது அவர்களின் ஆராய்ச்சிக்கும், பயிற்சிக்கும் பயன்படும் போது புதிய கண்டுபிடுப்புகளுக்கும் வழி வகுக்கும், நல் மருத்துவம் மேம்படவும் வழி வகுக்கும்.

அந்த வகையில் உடல் தான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஈரநெஞ்சம் அமைப்பு அவ்வப்போது நடத்தி வருகிறது. இதன் வழியாக பலர் தங்களது உடலை தானம் செய்ய அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் பதிவு செய்து வருகின்றனர் .

கடந்த ஜனவரி 21 தேதியில் டெக்கான் கிரானிக்கிள் ( Deccan Chronicle )
ஆங்கில நாளிதழில் வெளிவந்த உடல்தானம் பற்றிய தகவலில் ஈரநெஞ்சம் அமைப்பு உடல்தானம் பற்றிய விளக்கம் கொடுத்திருந்தது.

அதன் வழியாக கோவை பார்க் கல்லூரி ( park college of engineering and
technology ) Dean திரு. H. சந்திர குப்தா 68 மற்றும் அவரது மனைவி
திருமதி H.விஜய லக்ஷ்மி 67. இருவரும் தங்களது உடலை இறப்புக்கு பிறகு கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்ய முன் வந்து ஈரநெஞ்சம் அமைப்பை தொடர்புகொண்டனர் . அதனை அடுத்து ஈரநெஞ்சம் அமைப்பின் உதவியுடன் திரு. H. சந்திர குப்தா மற்றும் அவரது மனைவி திருமதி H.விஜய லக்ஷ்மி இருவரும் 20 ரூபாய் பத்திரத்தில் தங்களது உடல் தானம் பற்றிய உயிலை நோட்டரி வக்கீல் முன்னிலையில் பதிவு செய்து கோவை அரசு மருத்துவ கல்லூரி HOD . திருமதி . M . ரோகிணி தேவி அவர்களிடம் வழங்கினார்.



நாம் மட்டுமல்ல நமக்கு பின் நம்முடைய உடலும் மற்றவர்களுக்கு பயனாக இருக்கட்டுமே !

நண்பர்களே !!!
நீங்களும் உடல்தானம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்...

ஈரநெஞ்சம் - 9080131500
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment