Wednesday, December 11, 2013

மூன்றாண்டுகளுக்குப் பிறகு கிடைத்த உறவு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(242/10-12-2013)

திரு.ராஜசேகர் வயது 38 கடந்த ஒருவருடத்திற்கு முன்பு காவல்துறையினரால் கோவை மாநகராட்சி காப்பகத்தில் மனநிலை சரி இல்லாத நிலையில் சேர்க்கப்பட்டு காப்பகத்தின் பாதுகாப்பில் இருந்துவந்தார்.
https://www.facebook.com/photo.php?fbid=498754583555296&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
ஈரநெஞ்சம் மூலம் இவரை பற்றிய இந்த தகவல்களை கடந்த 6 ஆம் தேதி முகநூலில் மற்றும் வலைதளங்களில் பதிவிடப்பட்டது. பின்னர் ஈரநெஞ்சம் அமைப்பு எடுத்துக் கொண்ட முயற்சியின் மூலம், சாயர்புரம் காவல் நிலைய உதவியுடன் அவரது உறவினர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். அதன் மூலம் அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தூத்துக்குடியில் இருந்து கிளம்பி இன்று 10-12-2013 காலை கோவை வந்தடைந்தனர். அவரது அண்ணன் திரு. பாலசுப்ரமணியமும், மாமா மோகன சுந்தரம் அவர்களிடமும் ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் திரு. ராஜ்குமார் ஒப்படைக்கப்பட்டார்.
அவர்கள் கூறும்போது தனது தம்பி ராஜ்குமார். B.Com படித்திருப்பதாகவும், அவருக்கு திருமணமாகி விட்டது என்றும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அவர் காணாமல் போய் விட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது என்றும் கூறினார். . மேலும் 3 வருடங்களாக பல இடங்களில் அவரை தேடி அலைந்ததாகவும் கடந்த 7-12-2013 அன்று ஈரநெஞ்சம் அமைப்பினர் அழைத்து இவரை பற்றிய தகவல் தெரிவித்ததாகவும் கூறினார். இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தான் அவரது தநதையார் காலமானார். இன்னும் சில நாட்களுக்கு முன்பு இவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருந்தால் அவரது தந்தையையும் அவர் பார்த்திருப்பார். எனவே இப்படி தாமதம் ஆனதை நினைத்து ஈரநெஞ்சம் அமைப்பு வருத்தம் அடைகிறது என்றாலும் உறவினர்களை இப்போதாவது கண்டு பிடித்து சேர்த்து வைத்ததில் கொஞ்சம் திருப்தியாக உள்ளது.
தனது சகோதரனை தேடி தந்த ஈரநெஞ்சம் அமைப்புக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இனி அவரை நல்ல முறையில் பாதுகாப்பதாக கூறினார். இங்கு வந்த பின்பு தான் ஈரநெஞ்சம் அமைப்பினர் இது போல மேலும் பலரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதை அறிந்து கொண்டதாகவும் கூறினார்.
http://youtu.be/AU4gA2w8yew
மீண்டும் ஒரு உறவை தேடித் தந்த மகிழ்வில் அவர்களோடு ஈரநெஞ்சம் அமைப்பு, இவரது உறவினர்களை கண்டுபிடிக்க உதவிய காவல் துறையினருக்கும் நண்பர்களும் தன நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


Mr. Rajasekar age 38, a mentally disturbed man was admitted at Coimbatore City Corporation home by the police last year. Since then he has been under the care of the charity home. Information about him was posted on Facebook last 6th by Eera Nenjam. Later with the effort taken by Eera Nenjam, his relatives were found with the assistance of Sayarpuram police. Information about Mr. Rajasekar was sent to his relatives. They left Thoothukudi immediately and arrived Coimbatore today 10.12.2013 morning. Mr. Rajasekar was handed over to his big brother Mr. Balasubramaniyam and uncle Mr. Mohanasuntharam.
When they talked about his brother Rajasekar, they mentioned that he studied B.Com, married and was mentally disturbed. 3 years before he disappeared and they gave a complaint at the police station said that the FIR was filed. Also mentioned that they have been searching for him for the past 3 years, later Eera Nenjam contacted them and provided information about him last 07.12.2013. The most painful thing in this is that his father passed away 3 weeks ago. If he was reunited with his family little earlier, he could have seen his father. Eera Nenjam feel terrible about the delay in finding his family, but feel little satisfaction that atleast they found his relatives and reunited him with his family.
They expressed gratitude to Eera Nenjam for finding their brother and assured that they will protect him well. They also mentioned that they came to know about Eera Nenjam's services in rescuing others who were in the same situation as Mr. Rajasekar.
Eera Nenjam is satisfied and being glad about the fact that another helpless individual is being reunited with his family. They are also thanking the Police service and friends for their assistance in finding the family.
~thank you
Eera Nenjam

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment