Monday, September 23, 2013

ரயிலில் அடிப்பட்டு தான் யாரென்றே தெரியாத ஷேக் சலீம் ~ ஈரநெஞ்சம்***



***ஷேக் சலீம் ~ ஈரநெஞ்சம்***


ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த  நிலையில் தலை, கை, கால் மற்றும் உடம்பில் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் அடைந்த வட மாநில சிறுவன் குறித்து ரயில்வே காவல்துறை அதிகாரி திரு. சபரி அவர்கள் குடுத்த தகவலின் அடிப்படையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் சிறுவன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தான்.

அந்த சிறுவன் சுமார் 15 வயது இருக்கும். வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.  பிறகு எங்கே செல்வது என்று தெரியாமல் ஏதோ ஒரு ரயிலில் ஏறி பயணித்துள்ளான். எங்கெங்கோ சென்ற அவனுக்கு எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது.

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எப்படி விழுந்தான் அல்லது யாராவது தள்ளி   விட்டார்களா என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. பொதுமக்கள் சிலர் அவனை மீட்டு வேறு ஒரு ரயிலில் ஏற்றி அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து தான் திரு. சபரி அவர்கள் மூலம் இந்த சிறுவனை ஈரநெஞ்சம் அமைப்பினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

முதலில் சுயநினைவு இன்றி இருந்த சிறுவனுக்கு முதலுதவி மற்றும்  ஸ்கேன் போன்ற அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.  அப்போது சிறுவனுக்கு எந்த ஆபத்தும்  இல்லை என்றும் காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் மனநிலையும் நன்றாக  இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் அவன் தன்னை பற்றிய தகவல்களை சொல்ல தெரியாமல் மறந்து விட்டிருந்தான். கொஞ்சம் நினைவு திரும்பிய நிலையில் அவனை பற்றி விசாரித்த பொது ஒரு சில தகவல்கள் மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது.

அவன் பெயர் சலீம், ஒரிஸ்ஸாவில் உள்ள கட்டாக் என்ற பகுதியை சேர்ந்தவன், அவன் தந்தை சதுஜின் பெயிண்டராக      இருக்கிறார், தாய் கெத்தாம் பீபீ, இவன் அவர்களுக்கு இரண்டாவது பையன், அங்குள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறான் போன்ற தகவல்களை மட்டும் சொன்னான். ஐந்து மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறான். தற்போது அவனுக்கு தனது முகவரி, தொலைபேசி எண் போன்ற எந்த விவரங்களும் சொல்ல தெரியாமல் இருந்ததால் அவனது குடும்பத்தினரை  கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக இருந்தது.

எனினும் இணையதளம் மூலம் ஒரிஸா, கட்டாக் பகுதி காவல் நிலையத்தின் தொலைபேசி எண்  மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டறியப்பட்டு அவனது புகைபடங்கள் அங்கே அனுப்பட்டது. மேலும் முகநூல் மற்றும் இணையதளங்களில் புகைப்படம் வெளியிட்டு அவனது குடும்பத்தினரை தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போதுதான் அந்த காவல் நிலைய காவல் துறை அதிகாரி திரு. அஸ்வின் அவர்கள் மூலம் அவனது பெற்றோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்  தங்கள் மகன் காணாமல்  போனதாக  புகார் அளித்துள்ளது தெரிய வந்தது. அவனது புகைபடத்தை கண்டு அவர்கள் அது தங்கள் மகன் தான் என்பதையும் உறுதி செய்துள்ளனர். தங்கள் மகன் பலத்த காயங்களுடன் இருந்ததை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

பின்னர் அவர்கள் உடனடியாக ரயில் மூலம் கோவை வர அங்குள்ள காவதுறையினர் ஏற்பாடு செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளம்பிய அவர்கள் இன்று 22-09-2013 மதியம் சுமார் 2 மணிக்கு கௌஹாத்தி ட்ரெயினில் அவனது பெற்றோர் கோவை வந்தடைந்தனர். உடனடியாக அவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் சிறுவன் இருந்த அரசு மருத்துவமனைக்கு  அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தங்கள் மகனை கண்ட அவர்கள் அவனது காயம்பட்ட நிலை கண்டு வருந்தி கண்ணீர் சிந்திய போதும் தங்கள் மகனை திரும்ப பெற்று விட்ட நிம்மதியில் ஆனந்த கண்ணீரும் வடித்தனர்.மருத்துவமனையில்  இருந்த அனைவரும் கூடி அவர்களை தேற்றினார்.

மருத்துவமனையில் இருந்த போது அவன் சக நோயாளிகளிடம் சென்று உணவு வாங்கி உண்டு வந்தான். அவர்களும் அனைவரும் இவனிடம் நல்ல முறையில் பழகி விட்டனர். இவன் நிலை புரிந்து கொண்டு இவனிடம் இரக்கம் காட்டி முட்டை, ஆப்பிள்,  அப்பளம், சாதம் என இவனுக்கு வேண்டிய எல்லம்வழங்கி பார்த்துக் கொண்டனர். மருத்துவமனை ஊழியர்களும் செவிலியர்களும் இவனுக்கு நல்ல முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் அளித்தனர். ஓரிரு முறை சிறுவனுக்கு வலிப்பு வந்துள்ளது. அப்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து நல்ல முறையில் சிகிச்சை அளித்து வந்தனர். அவனுக்கு பாதுகாப்பும் சிகிச்சையும் அளிக்க மாவட்ட ஆட்சிசியர்   அவர்களும் வலியுறுத்தினார். ஈரநெஞ்சம் அமைப்பை சேர்ந்த திருநங்கைகள் அவனுக்கு உதவியாக அருத்துவமனையில் இருந்தனர். அவர்களும்  அவன் நல்ல முறையில் அன்போடு பார்த்துக்  கொண்டனர்.

இதனை தொடர்ந்து 23/09/13 அன்று ஷேக் சலீமிற்கு தொடர்ந்து   இங்கு சிகிச்சை பெறுவதற்கு  தங்களுக்கு மொழி பிரச்சனை இருக்கிறது அதனால்  அவனது தாய் தந்தை    தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். அதற்க்கு இணங்க  மருத்துவமனையில் இருந்து சலீமை டிஸ்சார்ஜ் செய்து அன்று மதியமே ஈரநெஞ்சம் அமைப்பு சலீம் , மற்றும் அவனது பெற்றோரை ரயிலின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

சிறுவனின் பெற்றோர் வரும் வரையில் அவனுக்கு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உதவிய மருத்துவமனை தலைமை அதிகாரி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அவனுக்கு சிறப்பு சிகிச்சைக்கு அனுமதி அளித்து உதவிய மாவட்ட ஆட்சியர் மற்றும் அவனுக்கு உணவு வழங்கி உதவிய உடன் இருந்த நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அவனுக்கு உணவு வழங்கிய கடைக்காரர்கள் அனைவருக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் ஈரநெஞ்சம் உறுப்பினர்களான  திருநங்கைகள் உடன் இருந்து அந்த சிறுவனை பராமரித்து வந்தனர். அவர்களுக்கும் சிறுவனை பெற்றோருடன் சேர்த்து வைக்க உதவிய காவல் துறை அதிகாரி திரு. அஸ்வின் மற்றும் ஈரநெஞ்சம் உறுப்பினர்களுக்கும் நன்றி.



~ஈரநெஞ்சம்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment